காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு துவக்க விழா மல்லிப்பட்டினம் காங்கிரஸ் கொடியேற்று நிகழ்ச்சி..

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை தலைவர் நாகூர்கனி கட்சிக் கொடி ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சி செய்த தியாகங்கள் பற்றி விளக்கி பேசினார். சிறுபான்மை துறை மண்டல பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் ஆண்டனி, நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், முகமது அப்துல் காதர், காதர் ஷா, நெப்போலியன், அப்துல்மாலிக், கலீல் ரகுமான், நவாஸ் மற்றும் சிறுபான்மை துறை வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்