உலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவியுள்ளது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 415 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து 115 பேர் குணமடைந்துள்ளனதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரானை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டள்ளது.
ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களிடையே நேற்று இரவு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் தனது உரையை தொடங்கினார். உலகின் பல நாடுகளில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்தியாவில் பலருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* முக கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக்கூடாது ஓமைக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
* குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசிதான் கொரோனா பரவல் தடுப்பதற்கான பேராயுதம்.
* 5 லட்சம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
* நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
* உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
* வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும்.
* 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும்.
* நாடு முழுவதும் இதுவரை 141 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
* இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன.
* 3,000 க்கும் மேற்பட்ட PSA ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளன. 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள் என்றுகூறினார். விரைவில், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து மற்றும் டிஎன்ஏ தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.