அதிர்ச்சி - தமிழகத்திலும் நுழைந்தது ஒமைக்ரான்: ஒருவருக்கு உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. தடுப்பூசி போட்டுக்கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்தலாம். இந்தியாவில் 9 மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் நைஜீரியாவிலிருந்து வந்த 47 வயதுடையவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 

மேலும், விமானத்தில் வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். இந்தியாவை  பொறுத்தவரையில், இதுவரை 10 மாநிலங்களில், 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்