இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு தற்போது வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப் ,சண்டிகர், தமிழ்நாடு என பல மாநிலங்களை ஒமைக்ரான் தொற்று தாக்கத் தொடங்கியுள்ளது . இதன் காரணமாக நேற்று கர்நாடகாவில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் உட்பட மேலும் ஐந்து பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் 12 பேருக்கு ஒமைக்ரானுக்கும் முந்தைய அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அவை பின்வருமாறு...
1. உள்நாட்டு பயணிகள் அனைவர்க்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பதிவு கட்டாயம்
2. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்
3. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம்
4. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
5. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை
6. கோவை, சென்னைக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்று சான்று வைத்திருக்க வேண்டும்.
சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விபரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.