திருவனந்தபுரம் - ஆசியாவின் மிகப்பெரிய பிரம்மாண்டமான Lulu மால் திறப்பு.


ஆசியாவின் மிகப்பெரிய வணிக வளாகம் எனும் பெருமையுடன் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள லூலூ மால் கடந்த 15 டிசம்பர் கேரள முதல்வர் பிணராய் விஜயன் திறந்து வைத்தார்.
திருவனந்தபுரம் – கழக்கூட்டம் பைபாஸ் சாலையில் டெக்னோபார்க எதிரில் உருவாகியுள்ள இந்த வளாகம் உலகம் முழுவதும் இயங்கும் 200க்கும் அதிகமான லூலூ மால்களை விட பல புதுமைகளை கொண்டுள்ளது.
குழந்தைகளுக்கு பிரத்யேகமான
450 ரைடுகளுடன் கூடிய Children’s Park, சுமார் 80ஆயிரம் சதுர அடியில் Family Park, பெண்கள் முதியவர்கள் என்று தனித்தனியாக குதித்து குதூகலமாக பொழுதை கழிக்கும் வகையில் பிரமாண்ட Trampoline Park திருவனந்தபுரம் லூலூ மாலின் சிறப்பம்சங்களில் ஒன்று. மொத்தம் 2.5 லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள தரைத்தளம் போக மீதமுள்ள இரண்டு மாடி முழுவதும் உலகத்தரம் வாய்ந்த 300 பிரபல நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் ஷோரூம் அமைத்துள்ளனர்.

உலகின் எல்லாவிதமான, எல்லா நாடுகளின் சுவையுடன் கூடிய தனித்தனி கவுண்டர்களுடன் கூடிய பிரம்மாண்டமான ஃபுட் கோர்ட் நவீன வடிவமைப்பில் உள்ளது..
ஒரே நேரத்தில் 2500 பேர் அமர்ந்து உணவு ஆர்டர் செய்து சமாதானமாக உணவருந்தி செல்ல முடியும்..
திருவனந்தபுரம் லூலூ மாலில்
12 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் சினிமா ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3800 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான மல்டி லெவல் பார்க்கிங் வசதிகள் கொண்ட இந்த மாலில், தனி வளாகத்தில் இரண்டு லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள தென்னிந்தியாவில் மிகப்பெரிய லூலூ ஹைப்பர் மார்க்கெட் மிகப்பெரிய வியப்பு..

திருவனந்தபுரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டு வரியாக
3.5 கோடி ரூபாய் செலுத்தியதின் மூலம் கேரளாவின் அதிகளவில் கட்டட வரி செலுத்தும் நிறுவனம் எனும் தகுதியும் திருவனந்தபுரம் லூலூ மால் பெறுகிறது.புதிய நிறுவனம் மூலம் பத்தாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஐயாயிரம் பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பு மூலம் பயனடைவர்.

தேனீர் அருந்தாமல், பர்ச்சேஸ் எதுவும் செய்யாமல் இந்த வளாகம் முழுவதும் சுற்றிவர அரைநாள் ஆகும் என்றும்,
பூங்காக்களில் பொழுது போக்கி, விதவிதமானஉணவருந்தி, ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு முழு நாள் இன்ப சுற்றுலா போல கழியும் என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. 




-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்