வணிகர்கள் நல வாரியம் மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி தர கோரிக்கை

டிச.21- வணிகர்கள் நல வாரியம் மூலம் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை உருவாக்கி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர்களின் சங்கமத்தின் சார்பில், மாநில மகளிர் அணி தலைவி பேராவூரணி ஆர்.ஜெயலட்சுமி, தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 

அதில் கூறி இருப்பதாவது, 
"வணிகர்கள் நலவாரியத்தில் மாநில அளவிலான பொறுப்புகளில், துணை பொறுப்புகள் எங்களது அமைப்பில் உள்ள இருவருக்கு (இருபாலர்) வழங்க வேண்டும்.

மகளிர் குழுக்களுக்கு வங்கிக்கடன் கொடுப்பதில், முக்கியமாக வணிகம் செய்யும் பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கான குழுக்கள் அமைத்து மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் சுலபமாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், வணிகர்கள் நலவாரியத்தின் மூலம் பெண்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி கொடுக்க வேண்டும்"
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்