உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வகை வைரஸ், கடந்த மாதம் 24-ந் தேதி கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பரவிவிட்டது. இன்னமும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுவதுதான்.
ஒரு வார காலத்திற்குள் ஒமைக்ரான் வைரஸ் -20 நாடுகளில் கால் தடம் பதித்து, உலகை அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிய ஒமைக்ரான் கொரோனா மத்திய கிழக்கு நாட்டிலும் கால் பதித்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் 7ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்து இருந்தது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.