முடச்சிக்காட்டில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

டிச.11, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பில், பொதுமக்கள் 300 பேருக்கு முதற்கட்டமாக நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. 

பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக்காடு முஸ்லிம் தெரு, கடைவீதி ஆகிய இடங்களில் கிளைத் தலைவர் எம்.அனிபா தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில், கிளைச் செயலாளர் அம்ஜத் கான், பொருளாளர் சேட் இப்றாம்சா, துணைத் தலைவர் மராமர் ஆர்.சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் சையது அபுதாகிர், தொண்டர் அணி அ.முகமது ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் நோய் பரவி வருவதை தடுக்கும் விதமாக, ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் உள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து, தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்