மல்லிப்பட்டினத்தில் மூடநம்பிக்கைக்கு எதிராக TNTJ பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளை சார்பில் "மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தொடர் பிரச்சாரம்" நேற்று ஆரம்பமானது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்த இஸ்லாம்! என்ற தலைப்பில் பில்லி சூனியம் பேய் பிசாசு நரபலி போன்ற சமூகத்தில் நிகழும் பல்வேறு மூடப்பழக்கங்களை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் கிளைத் தலைவர் சேக் அப்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட துணைச்செயலாளர் சத்திரம் பாவா முன்னிலை வகித்தார். மேலும் கிளை  நிர்வாகிகள் தொண்டரணியினர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்