அபுதாபி, அஜ்மான், ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கியது ஐக்கிய அரபு அமீரகம். இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை 6 நாட்கள் வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருந்து வந்தது. அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல தனியார் நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் கூட நடைமுறையையே பின்பற்றுகின்றன.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம் வேலை நாட்களில் புதிய மாற்றத்தை செய்து அறிவித்துள்ளது. அதன்படி 6 நாட்களாக இருந்த வேலை நாட்கள் 4. 1/2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அறிமுகமாகும் என கூறப்பட்டிருக்கிறது.
இதன்படி திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை 7:30 முதல் 3:30 வரை முழு வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரை (நான்கரை மணி நேரம் மட்டும்) மட்டும் வேலை நாட்களாகவும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு என இரண்டரை நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.