இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,097 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 534 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 4,82,551 பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் கொரோனாவால் 2,14,004 பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கிவிட்டது.
இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் செளமியா சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை மிக மோசமாக வீச தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.