கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 26ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்ல தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக தற்போது, நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுவதை ஒட்டியே கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.