தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 60 யூனிட் ரத்தம் வழங்கல்

ஜன.08-- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் , பேராவூரணி கிளை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, கொரோனா பேரிடர் கால ரத்ததான முகாமை, சனிக்கிழமை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடத்தினர். 

இந்த, ரத்ததான முகாமிற்கு, டிஎன்டிஜே மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், மாவட்டப் பொருளாளர் முடவை அசரப் அலி, மாவட்ட துணை தலைவர் அப்துல்லாஹ்,  மாவட்ட துணைச் செயலாளர் சத்திரம் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேராவூரணி அரசு தலைமை மருத்துவர் பாஸ்கர், ஜமால் மருத்துவமனை மருத்துவர் முஹமது நூருல் அப்ரார், பாலா மருத்துவமனை மருத்துவர் பாலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் 60 யூனிட் ரத்தம் தஞ்சை அரசு மருத்துவமனை  டாக்டர் ஜெர்லின் மற்றும் ரத்த வங்கி ஆலோசகர் புனிதாவிடம்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளைத் தலைவர் முகமது கனி, பொருளாளர் அல்லாஹ் பிச்சை, கிளை மருத்துவர் அணி ஷபியுல்லாஹ் செய்து இருந்தனர்.  முடச்சிக்காடு, செந்தலை கிளை நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்