காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைகாலில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஜனவரி 13-ஆம் தேதி தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 14,15-ல் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் புதுச்சேரி , காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று தென்மேற்கு வங்ககடல் , அதை ஒட்டிய பகுதிகளில் 3 கீ.மீ உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இடி , மழையுடன் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 35 கீ.மீ முதல் 45 கீ.மீ வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.