ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெறு வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதன்படி வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கி ஆளுநர் கூறுகையில்:
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில்,சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது பெருமைக்குரியது. பெரு மழை காரணமாக ஸ்தம்பித்த சென்னை; அணைகளில் இருந்து சரியான நேரத்தில் அளவான நீரை வெளியேற்றி, இயற்கை சீற்றத்தை சிறப்பாக கையாண்டு முதல்வர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்”,என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேசிய ஆளுநர்:
* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.
* குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நடப்பாண்டில் ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்.
* உயர்கல்வியில் தரமான பாடத்திட்டத்தை சேர்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும். கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும்
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கைபடி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகளில் தமிழ் பயன்பாட்டை அரசு உறுதி செய்யும்.
* குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதல்வரின் கனவாக உள்ளது. வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது.
* தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் ஃபர்னிச்சர் பூங்காவை விரைவில் முதல்வர் தொடங்கி வைப்பார்.இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
* ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்.
* இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* அரசு பள்ளிகளை நவீனப்படுத்த 5 ஆண்டுகளில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
* 6,996 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் அமைக்கப்படும்.
* இன்றைய காலத்துக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
* சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவது எளிதாக்கப்படும்.
* விவசாயிகளுக்கு புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.
* 8,600 மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
* இருமொழிக்கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.