தமிழ் யூடியூப் சேனல்களில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சோதனைகள் உள்ளிட்ட சேனல்கள் பொதுமக்களிடையே மிகப் பிரபலமாக இருப்பவை. அரசியல் நையாண்டிகள், நகைச்சுவை வீடியோக்கள் ஆகியவற்றால் இந்த சேனல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இடம்பெறுவது வழக்கம். பரிதாபங்கள் உள்ளிட்ட சேனல்களில் வீடியோக்கள் மீம்ஸ் மீம்ஸ் வடிவிலும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ், தியேட்டர் டி, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் திடீரென முடக்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து சேனல்களையும் அதிக அளவிலான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவை அனைத்தும் ஒரே இரவில் மர்ம நபர்களால் முடக்கப்பட்ட விவகாரம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முடக்கப்பட்ட அனைத்து சேனல்களில் கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் வருகின்றன. அந்த சேனல்களில் இதற்கு முன்னால் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.