உ.பி.யில் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கிசூடு..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க , சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. 

ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினரும் , ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுகிறது. அசாதுதீன் ஓவைசி இன்று உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது , 4 பேர் திடீரென கார் மீது 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். அதில் காரின் டயர்கள் பஞ்சர் ஆகியுள்ளது. அதன்பின் அவர் பாதுகாப்பாக வேறு காரில் ஏறி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஒவைசி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒவைசி ட்விட்டரில், “சில நேரத்திற்கு முன்பு டோல்கேட்டில் எனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 4 ரவுண்டுகள் சுடப்பட்டன. 3-4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விட்டனர். என் கார் பஞ்சர் ஆனது, ஆனால் நான் வேறொரு காரில் இறங்கி கிளம்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்