வரத்து வரியை புனரமைப்பு செய்ய 100 நாள் பணியாட்கள் தானாக முன்வந்து நிதியுதவி செய்துள்ளார்கள்.
ஆலங்குடி வட்டம், சேந்தன்குடி கிராமத்தில், உள்ள பெரியாத்தாள் ஊரணி, வரத்து வாரி தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி இருந்த காரணத்தால், கடந்த 40 வருடங்களாக நீர் நிரம்பாமல் இருந்து வந்தது. இதனையடுத்து, அவ்வூரில் இயங்கிவரும் 'நீரின்றி அமையாது உலகு' எனும் இளைஞர் அமைப்பு, வரத்து வரியை புனரமைப்பு செய்யும் வேலையில் இறங்கியது. இதற்கான நிதி உதவி, அந்த கிராம இளைஞர்களாலும், வெளிநாடுவாழ் நண்பர்களாலும், மாணவ மாணவியரின் உண்டியல் பங்களிப்பை கொண்டும் நடந்து வந்தது. இந்த அமைப்பின் நீர்வள ஆதார மேம்பாட்டு பணியை கேள்வியுற்று, இவர்களுக்கு உதவும் வகையில், 100 நாள் பணியாட்கள் தானாக முன்வந்து நிதியுதவி செய்துள்ளார்கள்.
இந்நிகழ்வில் நகரம் ஊராட்சி மன்றத் தலைவர் குண.வல்லரசு அவர்கள் தலைமையில் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் துரை.இளஞ்செழியன், வழக்கறிஞர் விஜயராஜகுமாரன், பணித்தாள் பொறுப்பாளர் கோபிக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீரின்றி அமையாது உலகின் நிர்வாகிகளும், கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி: முனைவர் வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.