ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர்

சென்னை ஆளுநர் மசோதாவை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். 

தமிழக சட்டமன்றத்தில் நீட்டிற்கு விலக்கு அளிக்க வழிவகுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பக்கோரி, ஆளுநருக்கு தொடர்ந்து தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியது. இந்நிலையில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட நாட்களாக கால தாமதம் செய்துவந்த ஆளுநர் இன்று நீட் மசோதாவை திருப்பி அனுப்பினார். 

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து ஆளுநர் மாளிகை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின்போது மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்