பேராவூரணியில் சொட்டு மருந்து முகாம் : MLA தொடங்கி வைத்தார்

பேராவூரணி, பிப்.27--
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம், 
வட்டார மருத்துவ அலுவலர் வி.செளந்தரராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் முகாமைத் தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப.சேகர், அப்துல் மஜீத், பிரசாத், மருத்துவ அலுவலர்கள் ரஞ்சித், சரண்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், 
சுகாதார ஆய்வாளர்கள்
ராஜேந்திரன், தவமணி, கிராம சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராவூரணி வட்டாரத்தில் 95 இடங்களில், 368 பணியாளர்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட 10 ஆயிரத்து 245 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செய்தி: முனைவர் 
வேத கரம்சந்த் காந்தி
 செய்தியாளர்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்