தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தவிர அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது

அதிராம்பட்டினம் நகராட்சி:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு முதல் தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதிராம்பட்டினம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும், பா.ஜனதா, எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி உள்ளன. அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 19 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளதால் அதிராம்பட்டினம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 

வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 27
தி.மு.க. - 19
அ.தி.மு.க. - 2
பா.ஜனதா - 1
எஸ்.டி.பி.ஐ. - 1
ஐ.யூ.எம்.எல். - 1
இந்திய கம்யூனிஸ்டு - 1
சுயேச்சைகள் - 2

பட்டுக்கோட்டை நகராட்சி:

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், ம.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்த நகராட்சியை பொறுத்தவரையில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சம பலத்தில் உள்ளன. சுயேச்சைகள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அவர்கள்தான் பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்ற முடியும். எனவே பட்டுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றப்போவது யார் என்பதற்கு விரைவில் விடை தெரிந்து விடும். 

வார்டு இறுதி நிலவரம்
மொத்த வார்டுகள் - 33
அ.தி.மு.க. - 13  
தி.மு.க. - 12
ம.தி.மு.க. 1
சுயேச்சைகள் -7.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்