சர்வதேச விமான பயணிகளுக்கு RT - PCR பரிசோதனை கட்டாயமில்லை - மத்திய அரசின் புதிய தளர்வுகள்!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்டு, 7 நாட்கள் தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.  

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவசியமில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில்,  2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என்றும்  விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்வது கட்டாயமில்லை  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று  குறைந்து வருவதால் தடுப்பூசியினை  முழு அளவில் செலுத்தி கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் கட்டாயம் இல்லை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்