கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விபரம் : நடமாடும் பேருந்து கணினியில் பதிவேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனாத் தடுப்பூசி செலுத்துவது குறித்து, 
ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் விபரங்கள் நடமாடும் டிஜிட்டல் பேருந்து மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சார்பில், கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முன் களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனாத் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்த விவரங்கள் அரசின் கோவின் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்காக டிஜிட்டல் பேருந்து வசதியை கடந்த மாதம் தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று, அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி தன்னார்வலர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று அழகியநாயகிபுரம், ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் வழிகாட்டுதலின்படி தன்னார்வலர்  மல்லிப்பட்டினம் நூருல்அமீன், பேராவூரணி நீலகண்டன் மற்றும் தன்னார்வலர்கள் அனைத்து விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்தனர். நேற்று மட்டும் சுமார் 1,200 பேரின் விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

செய்தி : முனைவர் வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்