தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணையை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் பள்ளிகளிலேயே நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.
10,11,12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது.
மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
மே 9 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்: பத்தாம் வகுப்பு ஜூன் 17 ஆம் தேதி, 11 ஆம் வகுப்பு ஜூலை 7 ஆமே தேதி, 12 ஆம் வகுப்பு ஜூலை 23 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு: 2022-23 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தேர்வு தேதிகள்: எந்தெந்த தேதிகளில் என்னென்ன தேர்வுகள் நடக்கும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியாகும்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.