கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி
போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2020 முதல் மலேசியா , கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பராமரித்து வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது அங்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார். அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் 2 கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கும் நிலையில் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று அந்நாடு பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் மலேசியாவில் வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரம் , பொது போக்குவரத்து , சமூக கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்படும் என அந்நாடு அரசு அறிவித்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.