தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுக்கான உறுப்பினர் தேர்தலில் 10 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றிபெற்றது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்ற மூன்று பேரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி தலைவர் தேர்தலில் 5 ஆவது வார்டில் வெற்றி பெற்ற சாந்தி சேகர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என தேர்தல் நடத்தும் அலுவலர் பா.பழனிவேல் அறிவித்தார்.
துணைத் தலைவர்
மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் 2 ஆவது வார்டு வேட்பாளர் கி.ரெ.பழனிவேல் (திமுக) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் கூட்டத்திற்கு வரவில்லை.
இதை போன்று தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த சுந்தரத்தமிழ் (திமுக) போட்டியின்றி தேர்வுமா செய்யப்பட்டார். மதியம் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் சித்ரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதவதி சான்றிதழ் வழங்கினார்.
அப்போது, மாநில மீனவரணி துணைச் செயலாளர் ஜெய்பிரகாஷ், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ராஜரெத்தினம், திமுக சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் பூவாளூர் ஞானப்பிரகாசம், கழனிவாசல் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் முத்துவேல், பட்டங்காடு மாரிமுத்து, இளைஞர் அணி முருகேசன், பூமிநாதன், காங்கிரஸ் கட்சி அய்யப்பன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்தி : முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.