UAE அமைச்சர்களுடன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை!

துபாய் EXPO கண்காட்சியில் பங்கேற்க 4 நாட்கள் பயணமாக துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் ஆலோசனை.

192 நாடுகள் பங்கேற்றுள்ள துபாய் EXPO 2020 கண்காட்சியில் பங்கேற்பதற்காக நேற்று 4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு பயணமாக துபாய் சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க அமீரக தமிழர்கள் சார்பில் பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஐக்கிய அரபு அமீரகத்தின், பொருளாதாரம், வர்த்தகத்துறை உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதன்படி, அமீரக அமைச்சர்கள் தானி பின் அகமது அல் ஸீயோதி, அப்துல்லா பின் டூக் அல் மர்ரி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வரின் ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் 28 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினை துபாய்க்கான இந்தியத் தூதர் ஜெனரல் அமன் பூரி வரவேற்றார். மேலும் புலம்பெயர்ந்த தொழில்துறை சார்ந்த தமிழர்களும் வரவேற்றனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்