தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கடலில் மிதந்த கஞ்சா மூட்டைகள்
கடலோர காவல்துறையினரும் போதைபொருள்தடுப்பு நுன்னறிவு பிரிவினரும் விசாரணை..
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரி புறக்கரையை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று நாட்டு படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர் அப்போது மூன்று பாகத்தில் மீன் பிடித்து கொண்டியிருந்தனர் அப்போது அவரது படகு அருகே 5 மூட்டைகள் தண்ணீரில் மிதந்து உள்ளது இதையடுத்து அந்த மூட்டைகளை தனது படகில் ஏற்றிக்கொண்டு மீனவர் சோமசுந்தரம் இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பரத்சீனிவாசன், அதிராம்பட்டினம் கடலோர காவல்படை ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர், மீனவர்கள் படகில் ஏற்றி வந்த மூட்டையை கைப்பற்றி அதிராம்பட்டினம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர். மூட்டையை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்து இருந்தது. அதில் 160 கிலோ எடையுள்ள ,சுமார் 25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா இருந்ததது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கஞ்சா கடத்தலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் கடல் மார்கமாக கடத்தல் கும்பல் கஞ்சாவை கடத்தி இருக்காலம் என சந்தேகின்றனர். கடத்தலின் போது கடலோர காவல்படை ரோந்து சென்றிருக்கலாம் அவர்களிடம் சிக்காமல் இருக்க கஞ்சா மூட்டையை கடலில் வீசி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார் எங்கிருந்து எங்கு கடத்தி சென்றார்கள் என்று கடலோர காவல்துறையினரும் போதைபொருள்தடுப்பு நுன்னறிவு பிரிவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கஞ்சா வருவதை தடுக்க அணைத்து எல்லைகளிலும் கூடுதல் சோதனைசாவடிகள் அமைத்து சோதனை தீவிர படுத்தபட்டுள்ளது மேலும் சாலை மார்க்கமாக கஞ்சா கடத்துவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.