கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் உயிர் பிழைப்பதே அதிசயம் என்ற நிலையில் இருந்து தற்போது ஓரளவு மீண்டு வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்தான். முகக்கவசம் அணியாவிடில் அபராதம் என்பது மட்டும்தான் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்ப பெறப்படவில்லை என்று குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது என கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.