செந்தலை ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள்

அதிகாரம் கொண்ட கிராமசபையின் கடந்த கால தீர்மானங்ள் பல நிறைவேற்றப்படுவதில்லை, தீர்மானங்கள் எழுத்து வடிவில் மட்டுமே இருப்பதாக புறக்கணிப்பு.

தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ந் தேதி கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக அன்றைய தினம் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராம சபை கூட்டம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலை வயல் ஊராட்சியில் தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிராம சபை கூட்டம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கிராம சபைக் கூட்டம் என்பது, ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.

சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். இப்படி அதிகாரம் கொண்ட கிராமசபையின் கடந்த கால தீர்மானங்கள் பல நிறைவேற்றவில்லை, தீர்மானங்கள் எழுத்து வடிவில் மட்டுமே இருப்பதாகவும் அவற்றை அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர் செயல்படுத்துவது கிடையாது , ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் இன்று நறைபெற இருந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தை ஊர் பொது மக்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிலர் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்