பெருநாள் பிறை தென்படாத காரணத்தால் வளைகுடா, ஐரோப்பிய நாடுகளில் நாளை ஈகை திருநாள்

ஈகை திருநாள் பிறை தென்படாத காரணத்தால் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மே 2 ஆம் தேதி நாளை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு இருந்து வருகிறனர், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 2 ஆம் தேதி பிறை பார்த்து அன்று முதல் ரமலான் நோன்பை நோற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் ரமலான் பிறை ஏப்ரல் 3 ஆம் தேதி தென்பட்டதை அடுத்து தலைமை காஜியால் நோன்பு அறிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் தென்படாத பிறை:

அந்தவகையில் இன்றுடன் அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 29 நோன்பை நிறைவு செய்த இஸ்லாமியர்கள் வானில் பிறையை பார்த்தனர். ஆனால், எங்கும் பிறை தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சவூதி அரேபிய அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ஈத் பிறை தென்படாத காரணத்தால் ரமலான் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து மே 2 ஆம் தேதி ஈகை பெருநாள் கொண்டாடப்படும் என அறிவித்து உள்ளது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளிலும் பிறை தென்படாததால் மே 2 ஆம் தேதி ஈகை திருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்