ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் - ஆதார் அறிவிப்பை திரும்பப் பெற்ற மத்திய அரசு

ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் என்கிற சுற்றறிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது.  

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று காலை  உரிமம் இல்லாத விடுதிகள் அல்லது திரையரங்குகள் போன்ற தனியார் நிறுவனங்களில் ஆதார் எண்ணையோ, ஆதார் நகலையோ சமர்ப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.  ஆதார் அட்டையை பார்க்க வேண்டும் அல்லது அதன் நகல் வேண்டும் என தனியார் நிறுவனங்கள் கேட்டால்,  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( Uidai) வழங்கியுள்ள உரிய பயனாளர் உரிமை இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அத்துடன்  கட்டாயஜ்ம் ஆதார் அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டியிருந்தால், அதற்கு பதிலாக பயனாளர்கள் கடைசி 4 இலக்க எண்களை மட்டுமே காட்டும் வகையிலியான் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.

மேலும்  பொது இடங்களில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள்  தவிர்க்க வேண்டும் என்றும்,   அவ்வாறு செய்யும் பட்சத்தில்  பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை கணினியிலிருந்து முற்றிலுமாக அழித்து விட்டதை பயனர்கள்  உறுதி செய்துகொள்ள  வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே  திரும்பப் பெறப்பட்டுள்ளது.  மேலும், ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்திருக்கிறது.  

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்