தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஒருவகையான காய்ச்சல்தான், கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து மக்கள் அச்சம் அடைய வேண்டாம் - ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த கேரள மாநிலத்தில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை வைரஸ் குழந்தைகளை மட்டுமே அதிகம் தாக்கி வருகிறது. கொல்லம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது மாதிரியான அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்டமாக, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தக்காளி வைரஸுக்கு அதிகளவில் பாதிக்கப்படுவதால் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் பரவி வரும் புதுவகை வைரஸ் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும். இதனால் இதற்கு தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.