வெயில் காலங்களில் செய்ய கூடியவை - செய்யவே கூடாதவை ...

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நமது உணவு பழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

வெயில் காலங்களில் கண்டிப்பாக நாம் செய்யவே கூடாதவை என சிலவும், செய்தே தீர வேண்டியவை எனச் சிலவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பற்றி பார்ப்போமா?

செய்யக் கூடியவை:

* ஃப்ரெஷ்ஷான அதே சமயம் அதிக நீர்ச்சத்துடைய பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* எப்போதும் அவரவர் உடல் எடைக்குத் தக்கவாறு போதுமான அளவு தண்ணீர் அருந்த மறக்காதீர்கள், எங்கே செல்வதாக இருந்தாலும் கையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

* சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே வெயில் காலமென்றால் ஒரு நாளில் இரண்டு முறை குளிக்க மறந்து விட வேண்டாம். உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது, சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதற்குச் சமம்.

* வெயில் காலத்தில் கூடுமான வரை வெளிறிய நிறங்களில் உள்ள தளர்வான காட்டன் மற்றும் லினன் ஆடைகளைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், அடர் நிறங்கள் சூரியக் கதிர்களை அப்படியே உள்வாங்கி சூட்டைக் கிளப்பும். வெளிறிய நிறங்களே சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் பிரதிபலிக்கும். எனவே வெயிலுக்கு வெளிறிய நிறங்களே ஏற்றவை.

* வெயில் காலங்களில் அதிக நீருள்ள திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் நிறைய வைட்டமின்களும் நீர்ச்சத்தும் உள்ளன. இவற்றுடன் மற்ற பழங்களையும் சாப்பிடலாம்.

* வெள்ளரியில் நீர்ச்சத்துடன் மாவுச் சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக வெள்ளரிப் பழத்தில் நிறைய கார்போஹைட்ரேட்டுகளும், புரோட்டீனும், கால்சியமும், தாது உப்புகளும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட வெள்ளரிப் பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனென்றால் வெள்ளரிப் பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது. வெள்ளரிப் பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளை கொடுத்து வெப்பத் தாக்குதலில் இருந்து வெளியேற உதவுகிறது.

* சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த இளநீர் வெயில் காலத்தில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த நீர் ஆகாரமாகும்.

* மதிய வெயிலில் வெளியில் செல்ல வேண்டியதாக இருந்தால் குடை பயன்படுத்துங்கள்.

செய்யக் கூடாதவை:

* இனிப்பான குளிர் பானங்கள் தாகத்தை அதிகரிக்கக் கூடியவை. எனவே அவற்றைத் தவிர்த்து விட்டு பதிலாக அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம். அதே போல சத்தான சாலட்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களை ஓரம் கட்ட வேண்டும்.

* குளிர்ச்சியான குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, இரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

* வெயில் காலத்தில் டீ அல்லது காஃபி அருந்தினால் அசிடிட்டி பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல்கள் போன்றவை உருவாகும். குறிப்பாக தூக்கம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு தொடர்ந்து டீ, காபி சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதற்குப் பதிலாக தற்போது மோர், கரும்பு ஜூஸ், இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை அருந்த பழகிக் கொள்ளலாம்.

* கோடை காலத்தில் நண்டு, சிக்கன், இறால் போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை சில சமயங்களில் சூட்டை கிளப்பி, வயிற்றுப் போக்கை உண்டாக்கி, உடலிலிருந்து நீரை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்