Whatsapp group அட்மின்கள் இனி யாருடைய மெசேஜ்களையும் Delete செய்யலாம்.. புதிய அப்டேட்..

Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் அப்-பில் புதிய வசதிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வாட்ஸ்அப் தளத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றங்கள் குறித்தும் WABetaInfo என்னும் நிறுவனம் முன்கூட்டியே தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, வாட்ஸ் அப் குரூப்களில் உறுப்பினர்கள் அனுப்பிய மெசேஜ்களை அட்மின்கள் டெலிட் செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “This Was removed by an admin’’ (இந்த மெசேன் அட்மின் ஒருவரால் டெலீட் செய்யப்பட்டது) என்ற வாசகம் அந்த மெசேஜை அனுப்பிய யூஸருக்கு காண்பிக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தான் மேம்படுத்தி வருகிறது என்றாலும், புதிய அம்சம் எப்படி காட்சியளிக்கும் என்பதற்கான ஸ்கிரீன்ஷாட் பதிவு ஒன்றை WABetaInfo நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குரூப்பில் வரும் மெசேஜ் ஒன்றை அனைவருக்கும் நீங்கள் (அட்மின்) டெலிட் செய்த பிறகு, அந்த மெசேஜை யார் டெலிட் செய்தார்கள் என்ற விவரம் மற்ற பயனாளர்களுக்கு காண்பிக்கப்படும். இதைத் தான் வாட்ஸ் அப் நிறுவனம் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்

கடந்த ஆண்டில் எபிமெரெல் மெசேஜஸ் என்ற அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அதற்குப் பிறகு வாட்ஸ் அப்-பில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாபெரும் மாற்றம் இதுவாகும். இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, உறுப்பினர்களை குரூப்பில் இருந்து வெளியேற்றுவதற்கு ஏற்கனவே அதிகாரம் உள்ள நிலையில், இனி அவர்களின் பதிவுகளை தணிக்கை செய்வதற்கான மாடரேட்டர்களாகவும் அட்மின்கள் செயல்பட முடியும்.

செந்தலை நியூஸ் வாட்ஸ்அப் குரூப் - ல் இணைய கிளிக் செய்யுங்கள்...
👇👇👇

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்