அண்மைக்காலமாக 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளும் அதிகளவில் வெளிவந்துள்ளன. 2021 - 2022ம் நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிதி ஆண்டில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டை விட மிக அதிகமாகும்.
இதற்கிடையே கள்ளநோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தற்போது அச்சடிக்கப்படுவதில்லை. இதனால் கள்ள நோட்டு தயாரிக்காமல் இருக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக கள்ள நோட்டுகளை முற்றிலும் ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளில் சில மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தின் சிறந்த பாதுகாப்புடன் கூடிய காகிதங்கள் மற்றும் மை பயன்படுத்தபட உள்ளது. விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல் ரூ.100, ரூ.200 நாணயத் தாள்களிலும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்படுகிறது. உயர் மற்றும் நடுத்தர மதிப்பு நோட்டுகளுக்கு நிறம் மாறாத மை, ஃபாயில் பேட்ச், மூன்று வகையான பாதுகாப்பு இழைகள், மைக்ரோ-துளைகள், காகிதம் மற்றும் மை அடிப்படையிலான குறிச்சொற்கள், நுண்ணிய இயற்பியல் மற்றும் ரசாயன குறிப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த ரூபாய் நோட்டுகளில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Source from : Dinakaran
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.