மனோரா கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த கடலோரப் பாதுகாப்பு குழுமம்

உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று கடலோரப் பாதுகாப்பு குழுமம் சார்பில், கீழத்தோட்டம், மனோரா கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரை மற்றும் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது.  
இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா தலைமை வகித்தார். கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானசேகரன், ராஜசேகர், சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன், ஓம்கார் பவுண்டேசன் நிர்வாகி பாலாஜி மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்