இந்தியாவிலேயே மிகப் பெரிய சூப்பர் மார்கெட்களில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் திறக்கப்பட்டு உள்ளது.
பெங்களூர், கொச்சி எனத் தென் இந்திய நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த லூலூ சூப்பர் மார்க்கெட் இப்போது முதல்முறையாக வட இந்தியா பக்கம் சென்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் லூலூ சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் உணவு பதப்படுத்துதல், ரியல் எஸ்டேட் மற்றும் நிதி சேவைகள் வரை கிட்டத்தட்ட அனைத்து வகையான சேவைகளையும் நாம் இந்த லூலூ மால்களில் பெறலாம்.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இந்த மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கும். கடந்த 2019இல் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் மால் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், இந்த மால் இப்போது திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.2000 கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்த சூப்பர் மார்கெட் சுமார் 22 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இதன் மூலம் நேரடியாக 4,800 பேரும், மறைமுகமாக சுமார் 10,0000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதேபோல கிரேட்டர் நொய்டாவில் உணவு மற்றும் காய்கறி பதப்படுத்தும் பிரிவையும் லூலூ நிறுவனம் நிறுவ உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலமும் அங்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
வசதிகள்
இந்த மாலில் 15 உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. மேலும் 25 பிராண்ட் தங்கள் சிறப்பு ஸ்டோர்களை தொடங்கி உள்ளன. 1,600 பேர் அமரக்கூடிய மெகா ஃபுட் கோர்ட்டும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 3,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் பிரத்தியேக 11 மாடி பார்க்கிங் வசதி 7 லட்சம் சதுர அடியில் உள்ளது. 11-திரை கொண்ட PVR சூப்பர்ப்ளக்ஸும் விரைவில் திறக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 3500 கோடி ரூபாயை லூலூ முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னை மற்றும் கோவையில் சூப்பர் மார்கெட்கள் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த லூலூ மால்கள் காரணமாக சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் லூலூ மால்களை அனுமதிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இப்போது பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திலேயே லூலூ மால் திறக்கப்பட்டு உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.