பேராவூரணி - சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு...

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, வரும் ஜூலை-5 ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, தமிழ்நாடு மின்வாரிய பேராவூரணி உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது "எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேதுபாவாசத்திரம் துணை மின்நிலையத்திலிருந்து செல்லும், 33 கே.வி குருவிக்கரம்பை, 33 கே.வி நாடியம், 33 கே.வி நாட்டாணிக்கோட்டை கோட்டை மற்றும் 33 கே.வி பள்ளத்தூர் ஆகிய மின் பாதைகளில் உள்ள ஊர்களில் நாடியம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, சம்பைப்பட்டினம், நவக்கொல்லை, கள்ளம்பட்டி, குருவிக்கரம்பை, நாட்டாணிக்கோட்டை, பேராவூரணி சேது ரோடு, கழனிவாசல், ஊமத்தநாடு, வீரியங்கோட்டை, உடையநாடு, கொரட்டூர், வாத்தலைக்காடு, முனுமாக்காடு, காலகம், பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு பூக்கொல்லை, கள்ளங்காடு மற்றும் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது" என தெரிவித்துள்ளார். 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்