தஞ்சை மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் ஆட்சியர் எச்சரிக்கை

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பொது இடங்களுக்கு வரும்போது முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 

* தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் விதமாக பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும்.

* அரசு பொதுத்துறை மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணி புரிய வேண்டும்.

* பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து வருவதை பல்லி கல்லூரி நிர்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

* அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துனர் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

* பக்தர்கள் முக கவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

* திரையரங்குகளுக்கு செல்வோர் முக கவசம் அணிந்து வருவதை அந்தந்த திரையரங்குகளின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் போஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்