தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோன தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட முதன்னை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில்,
* பள்ளி வளாகத்தினுள் கொரோனா விதிமுறைகளை 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும்.
* மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
* மாணவர்கள் அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும்.
* அதிகமான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும்.
* உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.
* தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
* வகுப்பறைக்குள் நல்ல காற்றோட்டமான சூழல் நிலவ வேண்டும்.
என பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.