நல்ல "மனைவி" அமைவது மட்டுமல்ல நல்ல "நட்பு" அமைவதும் இறைவன் கொடுத்த வரம்



நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் நல்ல நண்பர்கள் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம்தான்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசுவது போல ஒரு நல்ல நண்பரோடு சேர்ந்தால் நம் வாழ்வும் வளம்பெற்று மேன்மையடையும். அதேசமயம் ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலே அந்தப் பால் எப்படிக் கெட்டுப்போய் அதன் தன்மை இழக்குமோ அதுபோல்தான் தவறான நண்பர்களுடனான சேர்க்கையும் நம் வாழ்வை இழக்கச் செய்யும். 

தவண்டு , தவண்டு மெல்ல மெல்ல நடக்க பழகும் நாளு குழந்தைகளை ஒரு அறையில் விட்டால்கூட அவர்கள் ஒன்றுக்கொன்று நட்பாகிவிடுவார்கள். அதேபோல இன்றோ , நாளையோ என இறுதி உயிர் மூச்சை பிடித்துக்கொண்டு மரணத்தின் பிடியில் இருக்கும் ஒரு முதியவரின் காதருகே சென்று , உன் நண்பன் வந்திருக்கிறான் என பெயரை சொல்லி பாருங்கள் .. அவரின் முகத்தில் ஒரு முறை வந்து செல்லும் புன்னகையே அந்த நட்பின் ஆழத்தை உணர்த்தும். அந்தளவிற்கு சாதி , மத , இன , பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து பூக்கும் நட்"பூ" என்றும் உதிராதது....



நட்புக்காக சில வரிகள்:

* கூடவே பிறக்கவே இல்லை என்றால் கூட ஒன்றாகவே துடிக்கும் உண்மையான நண்பர்கள் வாழ்வில் கிடைத்த அதிஷ்டம்.

* உண்மையான காதலைப் போலவே, உண்மையான நட்பும் அரிதானது.

* பணம் போகமுடியாத இடங்களுக்கு கூட, நண்பர்களும் நல்ல பழக்கவழக்கங்களும் உங்களை அழைத்துச் செல்லும்.

* உன்னைப் பற்றி எல்லாம் அறிந்தவன், இருந்தும் உன்னை விரும்புபவன் நண்பன்.

* உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், உங்களைச் சுற்றி இருட்டாக இருக்கும்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும்.

* ஒரு நல்ல நட்பு ஒன்று இருந்தாலே போதும் நம் வாழ்க்கையின்  கஷ்ட நஷ்டங்கள் கூட நமக்கு காமெடி கலாட்டா தான்.

* ஒரு நண்பருக்காக இறப்பது சிரமம் அல்ல, ஆனால் இறப்பதற்கு தகுதியான ஒரு நண்பரைக் கண்டுபிடிப்பதுதான் சிரமம். 

* வெளிச்சத்தில் தனியாக நடப்பதை விட இருட்டில் ஒரு நண்பருடன் நடப்பது சிறந்தது. 

* பலர் உங்கள் வாழ்க்கையில் வந்து செல்வார்கள், ஆனால் உண்மையான நண்பர்கள் மட்டுமே உங்கள் இதயத்தில் கால்தடங்களை விட்டுச்செல்வார்கள்.

* உங்கள் வயதை நண்பர்களை வைத்துக் கணக்கீடுங்கள், வருடங்களை வைத்து அல்ல. உங்கள் வாழ்க்கையை புன்னகையை வைத்துக் கணக்கீடுங்கள், கண்ணீரை வைத்து அல்ல. 

* ஒரு விசுவாசமான நண்பர் பத்தாயிரம் உறவினர்களின் மதிப்புமிக்கவர்.

* மரணத்தைவிட விட மிக கொடியது நம்முடன் உயிராய் பழகிய நல்ல நண்பனை இழப்பது.

நட்பு வட்டாரத்தில் வாழும் அனைத்து நல்ல நட்புகளுக்கும் செந்தலை நியூஸ் சார்பாக சர்வதேச நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்