செந்தலையில் நடந்த மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி - வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கல்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினத்தில் SNCC அணியினரால் நடத்தப்பட்ட 13 - ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி  கடந்த ஜூலை 02, முதல் நேற்று வரை மூன்று நாட்கள் செந்தலைபட்டிணம் ECR மைதானத்தில்
நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அணிகள் மற்றும் மீமிசல் தொண்டி போன்ற ஊர்களை சேர்ந்த 24 அணிகள் இதில் பங்கேற்றன.

இப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது இப்போட்டியை செந்தலை ஊராட்சி மன்றத்தலைவர் M.ரகுமத்துல்லா அவர்கள் தொடங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் சேதுபாவாசத்திரம் டைகர் பாய்ஸ் மற்றும் செந்தலை SNCC அணிகள் மோதியது, இறுதியில் சேதுபாவாசத்திரம் டைகர் பாய்ஸ் அணி வெற்றி பெற்றது.

* இப் போட்டியில் வெற்றி பெற்ற சேதுபாவாசத்திரம் டைகர் பாய்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ 20,000 MKM இப்ராம்ஷா அவர்களின் சார்பில் வழங்கப்பட்டது. 

* இரண்டாம் பரிசு பெற்ற செந்தலை SNCC அணிக்கு ரூ 15,000 செந்தலை ஊராட்சி தலைவர் M.ரகுமத்துல்லா அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.

* மூன்றாம் பரிசு பெற்ற காரங்குடா அணிக்கு ரூ 10,000 S,O,A. ஆயூப்கான் அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.

* நான்காம் பரிசு பெற்ற SLP அணிக்கு ரூ .7,000 S.ரகுமத்துல்லா மற்றும் NMS. சேக்பரீத் (மைதான உரிமையாளர்) அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகோப்பையும், வீரர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்