பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிராம்பட்டினம் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியது.
இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளான 'பக்ரீத்' பண்டிகை வருகிற 10-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானியாக இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த பண்டிகையை முன்னிட்டு அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
குறிப்பாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி விவசாயிகளிடம் இருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிராம்பட்டினம் நகரில் உள்ள வர்த்தக பகுதிகளில் விற்பனைக்காக வைத்துள்ளனர். ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் விலை வரை 'பக்ரீத்' பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டி விடும். தினமும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக ஆடுகளை திடலில் மேயவிடுவார்கள். இந்த ஆண்டும் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் விதமாக ஆடுகளை மேயவிட்டுள்ளனர். வாடிக்கையாளர் ஆரோக்கியமான ஆடுகளை தேர்வு செய்து விலைக்கு வாங்கி செல்கிறார்கள். ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.