தஞ்சாவூா் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 19,98,458 பயனாளிகளுக்கு முதல் தவணையும், 18,74,807 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணையும், 39,983 பயனாளிகளுக்கு ஊக்குவிப்பு தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளா்கள், முன் களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டும் ஊக்குவிப்பு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
இதேபோல, ஜூலை 14 ஆம் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேல் 59 வயதுக்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ள 32 ஆவது மாபெரும் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் தவறாது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.