மல்லிப்பட்டினம் அருகே 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்கள்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கழிவுநீர் தொட்டி தோன்றிய போது மண்ணில் புதைந்த தொழிலாளி மீட்கப்பட்டார்.

மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமெண்ட் உறை இறக்க முடிவு செய்யப்பட்டது இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது மண் தோண்டும் பணியில் பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல் 45 வயது மற்றும் நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர்.

15 அடி ஆழத்துக்கு மண் தோன்றிய போது சித்திரவேல் குழிக்குள் இருந்து மண்ணை வெளியே எடுத்து கூடை மூலம் மேலே அனுப்பிக் கொண்டிருந்தார் அப்போது திடீரென மேலே இருந்து மண் சரிந்து குழிக்குள் விழுந்தது இதில் சித்திரவேல் மண்ணுக்குள் புதைந்தார் உடனடியாக அங்கு வேலை பார்த்த மற்ற தொழிலாளிகள் சித்திரவேல் மீது இருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் அதே நேரத்தில் பேராவூரணி தீயணைப்பு துறையிருக்கு தகவல் அளித்தனர் இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைநிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் சுப்பையன் நீலகண்டன் ரஜினி ராஜீவ் காந்தி மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவில் விரைந்து சென்று மண்ணுக்குள் சிக்கிக்கொண்ட சித்திரவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின் சித்திரவேல் உயிருடன் மீட்க ப்பட்டு பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சித்திரவேலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளன. சித்திரவேலை பெரும் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்களை பொதுமக்கள் பாராட்டினா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்