சேதுபாவாசத்திரம் மனோராவில் ரூ.33 லட்சத்தில் சிறுவர்கள் பூங்கா புதுப்பிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே ரபேந்திரராஜன்பட்டினத்தில் மனோரா சுற்றுலா தலம் அமைந்துள்ளது. கி.பி.814-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததின் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவு சின்னமாக கட்டப்பட்டது தான் இந்த மனோரா. பேராவூரணி-பட்டுக்கோட்டை போன்ற பெரிய நகரப் பகுதிகளின் மைய பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் இந்த மனோரா அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினரும் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சிறுவர் பூங்கா உள்பட பல இடங்கள் சேதமடைந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான பராமத்து பணிகள் நடந்தன. அதன்பிறகு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், சுற்றுலா மையத்தில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோல, ரூ. 49.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் படகுசவாரி தளம், ரூ.44 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையம் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.