கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாகவும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை  என பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த மீன் மார்க்கெட்டில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் தலைமையில் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் மீன்களை சோதனை செய்தனர். அதில் 2 கடைகளில் சுமார் 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. நோட்டீஸ் தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு உரிமம் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்