பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில் ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 433 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், நேற்று புதன்கிழமை இரவு பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அதில் ரகசிய அறை அமைக்கப்பட்டு, கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியை பேராவூரணி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதிலிருந்த 433 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரான தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமயக்கவுண்டன்பட்டி படையப்பா (24), மதுரை மாவட்டம் ஜெ. ஆலங்குடி ரமேஷ் குமார் (29), பேராவூரணி, பின்னவாசல் சிதம்பரம் (50) ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதில் திருச்சியைச் சேர்ந்த குமார் என்பவர் உள்ளிட்ட, வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால் தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சந்தை மதிப்பு ரூ 2 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.