கும்பகோணம் அல்அமீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி களம் திறப்பு

கிரிக்கிங்டம் விளையாட்டு சங்கம் மற்றும் கும்பகோணம் அல்அமீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக நேற்று நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சி களம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் – தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு. கல்யாணசுந்தரம் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் அவர்கள்,  கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள், பயிற்சிகளத்தை திறந்து வைத்தனர்.

இந்திய கிரிக்கிங்டம் செயல் தலைவர் – ரோகித் சர்மா அவர்களின் இளைய சகோதரர் விஷால் சர்மா அவர்கள், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் – மாநகர திமுக செயலாளர் சு. ப. தமிழழகன் அவர்கள், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் – கும்பகோணம் மத்திய திமுக செயலாளர் தி. கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர் அவர்கள், மாமன்ற உறுப்பினர் டி. ஆர். அனந்தராமன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி. கே. எம். ராஜா அவர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லீம் கல்விச் சங்க நிர்வாகிகள், கும்பகோணம் அல்அமீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
சர்வதேச அளவில் சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும், இந்திய அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சென்னை மற்றும் வேலூருக்கு அடுத்ததாக தற்போது 3வது கிளையை கும்பகோணத்தில் அமைத்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்